இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக மத்திய வங்கி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, சமூக ஊடகங்கள் மற்றும் பிற வலைத்தளங்களில் மத்திய வங்கியில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலி வேலை விளம்பரங்களின் பரவல் சமீபத்தில் அதிகரித்து வருவதாகக் தெரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி மூன்றாம் தரப்பு சமூக ஊடகங்கள் மூலம் வேலை வெற்றிடங்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடப்படுவதில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை,அனைத்து வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களும் மத்திய வங்கியின் வலைத்தளத்தில் “வேலைகள்” என்பதன் கீழ் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்களில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.