நாடு முழுவதும் 90 நிமிட மின்வெட்டு – பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

15

நாடு முழுவதும் இன்றும் 90 நிமிட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) அறிவித்துள்ளது.

அந்தவகையில், இன்றும் (11) பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மின்வெட்டு நேரங்களை அறிந்துக் கொள்ள முடியும்.

மற்றும் பாவனையாளர் கணக்கு எண்ணை 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்புவதன் மூலமும் மின்வெட்டு நேரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மின்வெட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அரச தரப்பு மின்வெட்டுக்கு காரணம் குரங்கு என்றும் பின்னர் நுரைச்சோலையில் ஏற்பட்ட பழுது என தெரிவித்தாலும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துக்கள் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இன்று முதல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சபை அறிவித்துள்ளதுடன், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரும், களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின் நிலையத்தின் தலைமை பொறியியலாளருமான தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறித்த மின் உற்பத்தி நிலையம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை மின்சார விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.