நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (6.2.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு அதிகரிக்கலாம் என மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.
எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், காற்றின் தரம் குறைவதால், முகக்கவசம் அணிவதோடு, உடல்நலக் பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Comments are closed.