இலங்கையின் சுதந்திர தின வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம்

14

மக்கள் விடுதலை முன்னணி (jvp) மற்றும் தேசிய மக்கள் சக்தி (npp) ஆகியவை முதல் முறையாக சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளன என எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக்க(Gayantha Karunathilleka) இன்று (04) தெரிவித்தார்.

” ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒரு போதும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை.

அவர்கள் முதல் முறையாக இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்றது போல் தெரிகிறது” என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏராளமான எதிர்க்கட்சி எம்.பிக்கள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, சமிந்திரனி கிரியெல்ல, வி.ராதாகிருஷ்ணன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

“எங்கள் கடமை என்பதால் தான் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க நாங்கள் எப்போதும் தவறமாட்டோம் ” என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

Comments are closed.