நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால் அனைத்து மக்களும் முடிந்தவரை முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தலை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது. அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் இன்று(04) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128ற்கு இடைப்பட்ட அளவில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைவரும் முகக் கவசங்களை அணியுமாறும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.
Comments are closed.