ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெற்கு கடற்கரையில் மின்னணு போர் வசதிகளுடன் கூடிய புதிய நிலத்தடி ஏவுகணை நகரத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரங்களில், ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கில் ஏராளமான இராஜதந்திர நடவடிக்கைகளுடன் இணைந்து, “நிலத்தடி ஏவுகணை நகரங்கள்” தொடர்பான தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில், IRGC இன் கடற்படைப் பிரிவு ஈரானின் தெற்கு கடற்கரையில் ஒரு புதிய நிலத்தடி தளத்தில் வைத்திருக்கும் மின்னணு போர் வசதிகளுடன் கூடிய கப்பல் ஏவுகணைகளை காட்சிப்படுத்தியுள்ளது.
இதன்படி, குறித்த புதிய தளமானது, ஈரானின் IRGC கடற்படை மூலோபாய தெற்கு நீரில் உள்ள அழிப்பாளர்களை குறிவைக்க வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நிலத்தடி தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள், மின்னணு போரை எதிர்கொள்ளும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் குறுகிய நேரத்தில் செயல்படுத்த கூடியவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட டஜன் கணக்கான தாக்குதல் படகுகள் இந்த தளத்தில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், ஈரான் தனது நிலத்தடி மற்றும் கள ஏவுகணை நகரங்களின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வெளியிட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறனதொரு பின்னணியில், ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதியும் துணை ஒருங்கிணைப்பாளருமான அட்மிரல் ஹபிபுல்லா சயாரி, தனது நாடு “எந்தவொரு அச்சுறுத்தலையும், அவை எங்கிருந்து தோன்றினாலும், எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
Comments are closed.