இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரக (High Commission of India) வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்திய பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S.Jaishankar) எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான பயணத்தின் போது இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Comments are closed.