ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் 17 பேர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிசம்பர் 7 முதல் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதல் என்ற கிராமத்தில் 12 குழந்தைகள் உட்பட பல இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் உணவு விஷம் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்தனர், ஆனால் திடீரென்று சுயநினைவை இழந்ததாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்தக் கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த நோய் தொற்றுநோயாகத் தெரியவில்லை என்றும், தொற்றுநோய் குறித்த பயம் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல்துறை அதிகாரிகள், நோயியல் நிபுணர்கள் மற்றும் பிற நிபுணர்களைக் கொண்ட உள்ளூர் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, பல மக்களை விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.