இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவுக்குள் அனுமதி மறுப்பு: பயந்தது போலவே நடந்துவிட்டது

0 1

ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம் இந்திய புலம்பெயர் சமுதாயத்தினரிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

புலம்பெயர்தல் விதிகளில், குறிப்பாக H1-B விசா போன்ற விடயங்களில் அவர் என்ன மாற்றம் செய்வாரோ என்றெல்லாம் கவலையடைந்திருந்தார்கள் அவர்கள்.

இந்நிலையில், அவர்கள் பயந்ததுபோலவே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Mirchi9 என்னும் ஊடகம் வெளியிட்டுள்ள அந்த செய்தியில், அமெரிக்காவில் வாழும் தங்கள் பிள்ளைகளை சந்திப்பதற்காக ஒரு இந்திய பெற்றோர் அமெரிக்கா சென்றதாகவும், Newark விமான நிலையத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அவர்கள் ஐந்து மாதங்கள் தங்கள் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் தங்கும் நோக்கில், B-1/B-2 visitor visaக்களுடன் பயணித்துள்ளார்கள்.

ஆனால், அவர்களிடம் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் return ticket இல்லை.

2025 விதிகளின்படி return ticket கட்டாயம் என அவர்களிடம் புலம்பெயர்தல் துறை அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.

அத்துடன், அவர்கள் அங்கிருந்தே நேரடியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது.

இந்த விடயம், அமெரிக்காவுக்குப் பயணிக்கும் இந்திய பயணிகளுக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அதிகாரப்பூர்வமாக அப்படி ஒரு அறிவிப்பு அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.