தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக ஓடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் 8.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பொங்கல் ஸ்பெஷலாக முடிவுக்கு வந்துவிட்டது. இந்த 8வது சீசனில் முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வாகிவிட்டார்.
100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கான சம்பளம், பரிசுத்தொகை என வென்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து படு பிஸியாக பேட்டிகள் கொடுப்பது, நண்பர்களை சந்திப்பது என பிஸியாக இருக்கிறார்.
பிக்பாஸில் கலந்துகொண்ட ரயான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பனிவிழும் மலர்வனம் தொடரில் நடித்து வந்தார். பிக்பாஸில் இருந்து வெளியேறியவர் மீண்டும் அந்த தொடரில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் பனிவிழும் மலர்வனம் தொடரில் இருந்து விலகியுள்ளார்.