சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசி ஷாக் கொடுத்த ராஷ்மிகா மந்தனா… என்ன இப்படி சொல்லிட்டார்
இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக National Crush என மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
2025ம் வருடம், ஜனவரி 1 அனைவரும் சந்தோஷமாக அந்த நாளை கொண்டாடினோம். ஆனால் இவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க கூட முடியாமல் வீட்டில் முடங்கினார்.
அந்த புகைப்படத்தை அவர் பதிவிட ரசிகர்கள் நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என கமெண்ட் செய்து வந்தனர்.
அண்மையில் அவர் ஹிந்தியில் நடித்துள்ள சாவா பட நிகழ்ச்சியில் கால் நொண்டியபடி நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டார். கால் அடிபட்ட போதிலும் ராஷ்மிகா நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டது அனைவராலும் பாராட்டப்பட்டது.
இப்பட நிகழ்ச்சியில் ஓய்வு குறித்து பேசி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இந்த படத்தோடு நான் ஓய்வு பெற்றாலும் அது எனக்கு சந்தோஷம் தான் என்று கூறியிருக்கிறார்.