நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. அடுத்து அவர் Chhaava என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
நடிகை ராஷ்மிகா காலில் அடிபட்டு இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொண்டு இருக்கிறார். அவர் ஒரு காலில் நொண்டிக்கொண்டே மேடைக்கு சென்று இருக்கும் வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையிலும் அவர் படவிழாவில் கலந்துகொண்டு இருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.