சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. இதன் காரணமாக ஜெயிலர் படத்தின் 2 – ம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் நெல்சன்.
இது தொடர்பான அறிவிப்பு பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இந்நிலையில், ஜெயிலர் படத்தில் சிறந்த பாடல்களை அமைத்து அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்த அனிருத் ஜெயிலர் 2 – ம் பாகத்திற்கும் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் இசையமைக்க அனிருத் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அனிருத் ரூ. 18 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.