குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரன் உயிரிழந்துள்ளனர்.
மஹாவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டர் சைக்கிள் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 31 வயதான ருவினிகா தனஞ்சனி சேமசிங்க, 23 வயதான புத்திக நயனஜித் சேமசிங்க ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் வெவ்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக சகோதரியை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற வேளையில் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது மோதுண்டு விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த அக்காவும் மற்றும் தம்பியும் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.