எதிர்காலத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(20) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அமைச்சருக்கும் அலுவலக நோக்கங்களுக்காக வாகனம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படாது என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை.
நாங்கள் கொள்கையை மிகத் தெளிவாக்கியுள்ளோம்.
ஒரு வாகனத்தை ஐந்து வருட காலத்திற்கு நாங்கள் வழங்குவோம். வாகனத்தை ஐந்து ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, வாகனம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் தேய்மானத்தின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளின் முடிவில் அரசாங்கத்திற்கு வாகனத்தின் மதிப்பை செலுத்தி வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.