போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20) அதிகாலை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “21 மற்றும் 23 வயதுடைய இருவர், கஜகஸ்தான் கடவுச்சீட்டுக்களுடன், குவைத்தில் இருந்து வந்துள்ளனர்.
பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்களின் பயண ஆவணங்கள், மேலதிக ஆய்வுக்காக எல்லை கண்காணிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தேகநபர்கள் போலி கடவுச்சீட்டுடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபர்களை கைது செய்த அதிகாரிகள் அவர்களை, அதே விமானம் மூலம் குவைத்திற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.