அரசாங்கத்துக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்குச் சொந்தமான வா்த்தக ரீதியில் அல்லாத 166 நிறுவனங்கள் குறித்தே இவ்வாறு கருத்துக் கோரப்படவுள்ளது.
குறித்த நிறுவனங்களில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் என்பவற்றை வினைத்திறனாகவும், மேம்பட்ட முறையிலும் வழங்குவதற்காக பொதுமக்களின் இந்நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரச நிறுவனங்களில் இருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பிலும், வினைத்திறனான முறையில் அந்நிறுவனங்களை செயற்படுத்துவது தொடர்பிலும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.
அதற்காக https://pmoffice.gov.lk/soesuggestions.php இணையத்தள சுட்டியினூடாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக அரச நிறுவனங்களை மேம்பட்ட முறையில் மறுசீரமைக்க பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.