வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் பெய்த கனமழையால் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சுமார் 6,000 கன அடி நீர் கலா ஓயா மூலம் எழுவன்குளம் – கலா ஓயா பாலத்தை கடந்து, பூங்கா பகுதிகளுக்கு பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயிலுக்குப் பொறுப்பான வனவிலங்கு பிரிவு, மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட முடியாது என தெரிவித்துள்ளது.