அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நாளில் என்னவெல்லாம் நிகழ்வுகள் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.
டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) நாளை அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இரண்டாவது முறையாக அவர் பதவியேற்க உள்ளதால், அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் இசை நிகழ்ச்சிகள், கொண்டாட்ட அணி வகுப்புகள் நடைபெற்று பின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜேடி வான்ஸ் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்பார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்காக சுமார் 220,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சரியாக 12 மணியளவில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், அமைச்சர்களும், தூதர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும் எலான் மஸ்க், மார்க் ஜூக்கர்பெர்க், சுந்தர் பிச்சை உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவன தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.