இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், விடுதலை செய்யப்பட உள்ள பணயக் கைதிகள் மூவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் கத்தார், எகிப்து, அமெரிக்கா நாடுகளின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.
இந்த போர் நிறுத்தம் 3 கட்டங்களை கொண்டது. ஹமாஸ் தரப்பில் இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது.
அதன்படி முதற்கட்டமாக 6 வாரங்களில் 33 பணய கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அதற்கு ஈடாக 1,904 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.
முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். இஸ்ரேல் 90 பேரை விடுதலை செய்ய வேண்டும்.
அதற்கு முன்பாக, விடுதலை செய்யப்பட உள்ள நபர்களின் பெயர்களை ஒப்பந்தப்படி தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் 90 பணய கைதிகளின் பெயர்களை நேற்றே வெளியிட்டு விட்டது.
இந்த நிலையில், இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு ஹமாஸ் மூன்று பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28) மற்றும் டோரன் ஸ்டான்பிரசர் (31) ஆகிய மூவரை ஹமாஸ் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.