பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் ஜான்வி கபூர்.
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளான இவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள் வந்தார். இதனை தொடர்ந்து ராம் சரணின் 16வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நடிகை ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும்.
இந்த நிலையில், தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது Boyfriend உடன் சென்றுள்ளார் நடிகை ஜான்வி கபூர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.