கோவிட் குறித்த தரவுகளை சீனாவிடம் மீண்டும் கோரும் உலக அமைப்பு

0 4

சீனாவின் வுஹான் நகரில் கோவிட் தொற்றுநோய் பரவ ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில் அதன் தோற்றம் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது ஒரு தார்மீக மற்றும் அறிவியல் கட்டாயமாகும் என்று உலக சுகாதார மையம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாடுகளுக்கு இடையே வெளிப்படைத்தன்மை, பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்கால தொற்றுநோய்களுக்கு உலகத்தால் போதுமான தயார் நிலையை உருவாக்க முடியாது என்றும் உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.

பல விஞ்ஞானிகள் கோவிட் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இயற்கையாகவே பரவியதாக நினைக்கிறார்கள்.

ஆனால் அது வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து வெளிப்பட்டதாக சில சந்தேகங்கள் தொடர்கின்றன.

இதற்கிடையில் உலக சுகாதார மையத்தின் புதிய கோரிக்கைக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.

தகவல்களின்படி சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் தொற்று பரவிய செய்தி 2019 டிசம்பர் 31ஆம் திகதி வெளியானது.

2020 விடியற்காலையில் உலக சுகாதார மையத்தின் பணியாளர்கள் தமது அவசர நிலையை ஆரம்பித்தனர்.

அடுத்த வந்த மூன்று நாட்களில் உலக சுகாதார மையம், தமது உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

2020 ஜனவரி 9-12 திகதிகளுக்குள், அந்த அமைப்பு, நாடுகளுக்கான அதன் முதல் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது,

இந்தநிலையில், பாரிய அழிவுகளை அடுத்து 2023 இல் கோவிட்டில் இருந்து உலகம் விடுபட்ட செய்தியை உலக சுகாதார மையம் வெளியிட்டது.

இதேவேளை உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸின் தகவல்படி, கோவிட்டினால் குறைந்தது ஏழு மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.

எனினும் உண்மையான எண்ணிக்கை 20 மில்லியன் என்றும் அதிகார பூர்வ மதிப்பீட்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் அடுத்த தொற்றுநோய் எந்த நேரத்திலும் வரலாம் என்றும் அதற்கு உலகம் தயாராக இருக்கவேண்டும் என்றும் கெப்ரேயஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.