மொசாட் அமைப்பு செய்த காரியம் : ஹிஸ்புல்லா தலைவரின் கட்டில் வரை ஊடுறுவிய மூளை

0 2

ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் மூத்த தளபதியான ஃபுவாட் ஷுக்ரை (Fuad Shukr ) கண்காணித்த மொசாட் அமைப்பு சில வினோதமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் (Israel) உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் கண்காணிப்பு அமைப்புகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. எவ்வளவு பலத்த கட்டுப்பாடுகள் என்றாலும் அதையும் தாண்டி ஊடுருவுவது தான் மொசாட் திறமை.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் தொடர்ந்து வருகிறது. இப்போது கிட்டத்தட்ட போர் முடியும் தருவாய்க்கு வந்துள்ள நிலையில், இந்த மோதல் தொடர்பாக சில பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்கிடையே ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்களைக் கண்காணித்த போது இஸ்ரேலின் மொசாட் அமைப்பு சேகரித்த விபரங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

அதில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி ஒருவருக்கு நான்கு மனைவிகள் இருந்ததும் அவர்கள் அனைவரையும் அவர் தொலைபேசி மூலமாகவே திருமணம் செய்ததும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் கண்காணிப்பதில் தெரிய வந்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான ஃபுவாட் ஷுக்ருக்கு இதுபோல நான்கு திருமணங்கள் நடந்துள்ளது. இந்த 4 திருமணங்களுமே இந்தாண்டு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா சரமாரியான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. அதில் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டினர் கொல்லப்பட்டனர்.

இதற்கு முளையாக ஷுக்ர் இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர் கொல்ல இஸ்ரேல் முடிவு செய்தது.

இதையடுத்து கண்காணிப்பு வளையத்தை மொசாட் தீவிரப்படுத்திய நிலையில், ஒரு தொலைபேசி அழைப்பில் அவரது இருப்பிடம் தெரிய வந்தது.

உடனடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஷுக்ர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.