அமெரிக்காவின் (United States) புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அந்த நாட்டில் டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டொக் செயலி உதவியாக இருந்திருக்கலாம்.
அத்தோடு, மேலும் சில காலத்திற்கு அந்தச் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்ப் சார்பில் அமெரிக்க அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரல் ஜோன் சாயர் அமெரிக்க உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான தாம் பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.