அசர்பைஜான் விமான விபத்து தொடர்பில் பல்வேறு தடயங்களை அமெரிக்கா(US) கைப்பற்றியுள்ளதான அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி(John kirby) வெளியிட்ட கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“விபத்து தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா உதவும் என கிர்பி கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படங்களை விட அதிகமான தடயங்களை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
விமானத்தின் ஜிபிஎஸ் சிஸ்டம், மின்னியல் கருவிகள் சேதமடைந்ததாக அசர்பைஜான் நம்புவதாக விமானப் போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளின் தாக்குதலால் அது சேதமடைந்ததாக அவர்கள் கருதுகின்றனர்.
எனினும், அசர்பைஜான் ரஷ்யா மீது குற்றம்சாட்டவில்லை. ஆனால் அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ரஷாத் நபியேவ் கூறுகையில், விமானம் ‘வெளிப்புற குறுக்கீட்டால்’ பாதிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
க்ரோஸ்னிக்கு மேலே விமானம் பறந்த போது மூன்று வெடிப்புகள் கேட்டதாக உயிருடன் திரும்பிய பயணிகள் கூறியுள்ளனர்“ என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.