கனடாவில் குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் விதிமுறையில் அதிரடி மாற்றம்

0 1

கனடா(canada) குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது. எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் கனடா குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் அவர்களது கல்வி, வேலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

கனடாவில் வேலை பார்ப்பதற்கான நிறுவனம் அளிக்கும் நியமன உத்தரவு கடிதத்துக்கு, 50 முதல் 200 புள்ளிகள் வரை கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலி உத்தரவு கடி தங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.