முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னரா? மறைமுகமாக கூறினாரா விஜய் சேதுபதி

0 1

பிக் பாஸ் 8 துவங்கிய 70 நாட்களைக் கடந்துள்ளது. இதில் 23 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எலிமினேஷன் நடந்தது. முதலில் ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த வாரம் சத்யா மற்றும் தர்ஷிகா இருவரும் வெளியேறினார்கள்.

13 போட்டியாளர்களுடன் 11வாரம் துவங்கியுள்ளது. கண்டிப்பாக இதுவரை எதிர்பார்க்காத கடுமையான ஆட்டங்களை இனி வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

நேற்று ஒளிபரப்பான எபிசோடில், எலிமினேஷன் முடிந்தபின், போட்டியாளர்களைத் தனியாக கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து பேசினார் விஜய் சேதுபதி.

அப்போது முத்துக்குமரன், “105வது நாளில் உங்களுடன் மேடையில் நிற்கவேண்டும்” என விஜய் சேதுபதியிடம் கூறினார். பின் பேசிய விஜய் சேதுபதி “நீங்கள் என்ன அடைய விரும்புகிறீர்களோ, அது உங்கள் கைவசம் வரும் என நான் நம்புகிறேன்” என கூறினார்.

விஜய் சேதுபதி இப்படிக் கூறியவுடன், முத்துக்குமரன் டைட்டில் வின்னர் என்பதை தான், அவர் மறைமுகமாகக் கூறி வருகிறார் என முத்துக்குமரனின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.