கனடா(canada) ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் தமிழ் தம்பதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
37 வயதான கணவன் மீது மீது 8 குற்றச்சாட்டுகளும், மனைவி மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் காவல்துறையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது தம்பதிகள் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.