24 மணிநேரத்தில் உக்ரைன் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

4

உக்ரைனின் (ukraine)குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ஆயுத படையை சேர்ந்த 280 பேர் தமது படையினர் 24 மணிநேரத்தில் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய(russia) பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 3 கார்கள், மின்னணு போர் நிலையம் மற்றும் 2 பீரங்கி ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில், குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் நாடு 37,935 வீரர்கள் மற்றும் 229 பீரங்கிகளை இழந்துள்ளது என்றும் அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டில் தொடங்கிய நிலையில் இரண்டு பகுதியிலுமே கடுமையான இழப்பக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.