டிரம்பின் வருகையுடன் புதிய மைல்கல்லை தொட்டது பிட்காயின்

3

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான (Cryptocurrency) பிட்காயின் (Bitcoin)மதிப்பு அதிகரித்து அதன் மதிப்பு 1 லட்சம் டொலராக பதிவாகியுள்ளது.

அன்மையில் அமெரிக்க (United States) ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் (Donald Trump) வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையின் பெருமதி உயர்ந்ததுடன் தங்கம், வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டது.

இவை அத்தனையையும் விடவும் அதிகமாக பேசப்படுவதும், பலருடைய கவனம் பெற்றது இணைய நாணயமான கிரிப்டோகரன்சியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டது.

அந்தவகையில், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் 97,594.85 அமெரிக்க டொலராக இருந்தது.

டிரம்பின் வருகையுடன் புதிய மைல்கல்லை தொட்டது பிட்காயின் | Bitcoin Price

விரைவில் இது 1 லட்சம் டொலரை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டொலரை இன்று (05.12.2024) தொட்டுள்ளது.

 இலங்கை ரூபாவில் இதன் பெறுமதி கிட்டத்தட்ட 03 கோடியாகும். பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக பால் அட்கின்சை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்த நியமனத்துக்கு பிறகு தான் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற 4 வாரத்தில் கிரிப்டோ கரன்சி 45 சதவீதம் அதிகரித்ததுடன்.

தேர்தல் நாளில் கிரிப்டோ கரன்சி 69,374 அமெரிக்க டொலராக இருந்தது. தற்போது 1,01,512 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.