நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த மே 31ம் தேதி வெளியான திரைப்படம் கருடன்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாரான இப்படம் தேனி மாவட்ட வட்டாரத்தில் நிகழும் கதையாக உருவான கருடன் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. சூரியின் நடிப்பும், சண்டைக் காட்சிகளும் அதிகம் பாராட்டப்படுகின்றன.
விடுதலை படத்திற்கே நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்த சூரிக்கு கருடன் படம் பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. காமெடியன் என்பதை தாண்டி இப்போது நாயகனாக ஸ்கோர் செய்து வருகிறார் சூரி.
நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் நடிகர் சூரியின் கருடன் திரைப்படம் ரூ. 39 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.
வரும் நாட்களிலும் வார இறுதி, பக்ரீத் விடுமுறை வருதால் படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments are closed.