கன்னடத்தில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் உலகளவில் ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தில் கதாநாயகனாக நடித்து நம் அனைவரின் மனதில் இடத்தை பிடித்தார் நடிகர் யாஷ். கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் இந்த பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார்.
கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யாஷ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தான் டாக்சிக். இப்படத்தை பிரபல இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் யாஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 65 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
Comments are closed.