இந்த ஒரு படம் போதும்!! நடிகை அபர்ணாவிடம் கெஞ்சி கேட்டுக் கொண்ட தந்தை.. எதற்கு தெரியுமா

10

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், 2017 -ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதன் பின் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.

இப்படத்தில் அபர்ணா சிறப்பாக நடித்திருந்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதை தொடர்ந்து, சமீபத்தில் இவர் நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அபர்ணா ‘ருத்ரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் இப்படம் வரும் டிசம்பர் 13ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில், முதல் முறையாக ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அபர்ணா சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” ருத்ரம் படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நான் நடித்ததால் பல முன் பயிற்சிகளை எடுத்து கொண்டேன்.

அந்த காட்சிகளை வீட்டில் ரிகர்சல் செய்து பார்ப்பதற்கு என் அப்பாவை பயன்படுத்தி கொண்டேன். இப்படி ஒரு தந்தை கிடைத்தது வசதியாக போய்விட்டது.

மேலும், என் தந்தை என்னிடம் இந்த ஒரு ஆக்சன் படம் மட்டும் போதும், இனிமேல் வேறு எந்த ஆக்சன் படங்களையும் தயவு செய்து ஒப்புக்கொள்ளாதே என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்” என்று சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.  

Comments are closed.