பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கும் அருண் பிரசாத் காதலி தான் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன். கடந்த சீசன் டைட்டில் ஜெயித்த அர்ச்சனா இந்த முறை அருண் பிரசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் விஷயங்களுக்காக வெளியில் அர்ச்சனாவை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
“நானும் அருண் பிரசாத்தும் வெவ்வேறு நபர்கள். நானும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறேன். ஒரு friend ஆக அருணுக்கு ஆதரவு தருகிறேன், ஆனால் அவர் செயல்களுக்கு நான் பொறுப்பாக முடியாது” என அர்ச்சனா கடந்த வாரம் மனமுடைந்து பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் கமெண்டுகள் மற்றும் மெசேஜில் மிக அசிங்கமாக பேசுகிறார்கள். எனக்கு R*ape மற்றும் ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல்கள் வருகிறது என அர்ச்சனா ட்விட்டரில் தற்போது புகார் கூறி இருக்கிறார்.
அதன் screenshot வெளியிட்டு அர்ச்சனா வெளியிட்டு இருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.