ஹத்தரலியத்த – துன்பனே உள்ளூராட்சி சபையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹத்தரலியத்த காவல்துறையினரால் இரண்டு கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹத்தரலியத்த (Hatharaliyatta) காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொல்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை செய்த வேளையில் இவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவரை அழைத்து அந்த தொழிலில் இருந்து விடுபடுமாறு எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எச்சரிக்கைகளை ஏற்காத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கசிப்பு விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹத்தரலியத்த காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் இன்று (10) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Comments are closed.