ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஒரு வெற்றி கிடைக்கவில்லை. அதில் அநுரகுமார திஸாநாயக்க 42% வாக்குகளையே பெற்றிருந்தார்.
எனினும், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் அநுர எடுத்த முடிவுகள் அவரது கட்சிக்கு மிகப்பெரும் வெற்றியை தேடித் தந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் துவண்டு போன அவரின் அரசியல் எதிரிகளை மீண்டெழ அவகாசம் கொடுக்காது உடனே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது அநுரவின் அரசியல் தந்திரம் ஆகும்.
இதுவே, நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு இமாலய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.
Comments are closed.