இந்திய சினிமாவில் இருந்து இதுவரை ரூ. 1000 கோடி வசூலை சில திரைப்படங்கள் மட்டுமே வசூல் செய்துள்ளது. தங்கல், பாகுபலி, RRR, கேஜிஎப், கல்கி, ஜவான், பதான் ஆகிய படங்கள் தான் இதுவரை ரூ. 1000 கோடியை பாக்ஸ் ஆபிஸில் இந்திய சினிமாவிலிருந்து கடந்துள்ளது.
அதிலும் சீனாவில் மாபெரும் வசூல் வேட்டையை சில இந்திய திரைப்படங்கள் செய்துள்ளது. தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பி.கே மற்றும் அந்தாதுன் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் மகாராஜா படமும் இந்த வரிசையில் இடம்பெறும் மிகபெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 2024ல் டாப் 10 தமிழ் திரைப்படங்கள் என்று எடுத்துக்கொண்டால், அதில் கண்டிப்பாக விஜய சேதுபதியின் மகாராஜா படமும் இடம்பெறும்.
இப்படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். தமிழில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த மகாராஜா படத்தை தற்போது, சீன மொழியில் டப்பிங் செய்து, சீனாவில் வருகிற 29ஆம் தேதி வெளியிடுகின்றனர்.
தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் ஆகிய படங்களை போலவே, மகாராஜா படமும் சீனாவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தமிழ் சினிமாவின் கனவை நிறைவேற்றுகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments are closed.