விஜய்யை டாக்டர் ஆக்க நினைத்த அம்மா.. ஆனால் நடிகர் ஆனது ஏன் தெரியுமா

12

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு அவர் தெரியரின் உச்சத்தில் இருக்கிறார்.

விஜய்யின் அப்பா எஸ்ஏசி பிரபல இயக்குனர் என்பதால் விஜய் சினிமாவில் எளிதாக நுழைந்தாலும் அவர் ஆரம்ப கட்டத்தில் மேலுமான விமர்சனங்களை சந்தித்திருக்கிறார்.

இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார்.

விஜய் பற்றி ஒரு விஷயத்தை அவர் கூறி இருக்கிறார்.

விஜய்யை டாக்டர் ஆக்க வேண்டும் என்று தான் அவர் ஆசைபட்டாராம். “டாக்டர் டாக்டர்” என நாங்கள் அழைத்தோம். ஆனால் அவர் “ஆக்டர் ஆக்டர் ” என நடிக்க போய்விட்டார். சின்ன வயதில் இருந்தே விஜய் தான் என்ன நினைப்பாரோ அதைத்தான் செய்வார்.

செய்து முடிக்காமல் விட மாட்டார் என ஷோபா கூறியுள்ளார்.

Comments are closed.