இப்படியொரு திட்டத்தால் தான் கார்த்திகை தீபம் தொடரில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர்.. அர்த்திகா அதிர்ச்சி தகவல்

11

ஜீ தமிழில் மிகவும் பிரபலமாக ஓடிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி. இந்த தொடரில் நாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் கார்த்திக்.

தற்போது இவர் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய நாயகனாக நடிக்கிறார், இதில் நாயகியாக அர்த்திகா நடித்து வந்தார்.

கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தோடு முடிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் இருந்த 2வது சீசன் தொடங்க உள்ளது, புரொமோக்களும் வெளியாகிவிட்டது.

கார்த்திகை தீபம் முதல் சீசனில் நடித்த அர்த்திகா சமீபத்திய ஒரு பேட்டியில், இந்த சீசன் முடியப்போகிறது, அடுத்த சீசன் வருகிறது. 2வது சீசனில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள்.

அதற்கு காரணம் எனக்கு அண்மையில் தான் கல்யாணம் ஆச்சு, என்னால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியல. இதையெல்லாம் பார்த்துவிட்டு என்னை சீரியலில் இருந்து திட்டம் போட்டு தூக்கிவிட்டார்கள்.

இதில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. இதுவரை எனக்கு ஆதரவு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

Comments are closed.