கனடாவை(canada) சேர்ந்த சிலர் மிக அநாகரிகமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என கனடிய பிரதமர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.குறிப்பாக தமது குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது சில சந்தர்ப்பங்களில் உணர்வுபூர்வமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு(justin trudeau) எதிராக கட்சிக்குள்ளும்,வெளியிலும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த பின்புலத்திலேயே தன்மீதான சில விமர்சனங்கள் அநாகரிகமானவை என அவர் குறிப்பிட்டார்.
எனினும் கனடிய மக்கள் நாகரிகமானவர்கள் எனவும் பெரும்பான்மையானவர்கள் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
தன்மீது இழிவான விமர்சனத்தை முன்வைப்பவர்களுக்கு தமது விளக்கத்தை அளிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சியை வழி நடத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments are closed.