அமெரிக்க தேர்தலில் தலையிடும் பிரித்தானியா: ட்ரம்ப் தரப்பு குற்றச்சாட்டு

7

பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகளை மேற்கொள்வதாக வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பின் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு வேட்பாளர் கமலா ஹரிஸின் பிரசார நடவடிக்கைகளில் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி தன்னார்வமாக செயற்படுவதாக ட்ரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், வெளிநாட்டு பிரஜைகளுக்கு பணம் செலுத்தி அமெரிக்காவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க முடியாது என அந்நாட்டு சட்டங்கள் கூறுகின்றன.

முன்னதாக, பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சியின் செயற்பாட்டுக் குழுவின் மேலாளர் சோபியா பட்டேல் தனது லிங்க்ட்இன் தளத்தில் இட்ட பதிவில், 100 பேரை அமெரிக்காவிற்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே, ட்ரம்ப் தரப்பினர் தொழிலாளர் கட்சியின் மீது இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Comments are closed.