196 ஆசனங்களுக்கு போட்டியிடும் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்

21

இலங்கை தேர்தல் அரசியல் களத்திலே நாங்கள் தற்போது வித்தியாசமான தேர்தல் களத்தை எதிர்நோக்கி இருக்கின்றோம்.

அதாவது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் மக்களுக்கு உண்மையில் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தது எத்தனை பேர், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி மேலும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என வருபவர்கள் எத்தனை பேர் என்பதை மக்கள் தான் தீர்மானித்து நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும்.

எனவே, இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலே மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கக் கூடியவர்கள் யார் என்பதை அறிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.