அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு சிட்னியில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
சிட்னியின் செயின்ட் தோமஸ் தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட இருவருக்கும் பெருந்திரளான மக்களால் இவ்வாறு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தில், சார்லஸும் கமிலாவும் கையெழுத்திட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த புத்தகமானது, 1788 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தண்டனைக் குற்றவாளிகளை அழைத்துச் சென்ற முதல் கடற்படைக் கப்பலுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் குடியரசுவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் வெளியாகிவரும் இந்த சந்தர்ப்பத்தில் மன்னர் சார்லஸின் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Comments are closed.