இத்தாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேபிள்ஸ் பகுதியில் கடந்த வாரம் அதிகாலை 3:54 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டில் இலங்கையை சேர்ந்த 50 வயதுடைய நபரே காயமடைந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்ட நிலையில் காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வன்முறை சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையர் காயத்தில் இருந்து மீண்ட பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
Comments are closed.