மகிந்த தொடர்பில் அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

5

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்ட சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தற்போது தங்காலை வீட்டில் தங்கியுள்ளதால், அவர் கொழும்பு திரும்பிய பின்னர் வாகனங்களை கையளிப்பார் என பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மையில், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீளாய்வு செய்யவும் தேவையான பரிந்துரைகளை வழங்கவும் அரசாங்கம் ஒரு குழுவை நியமித்திருந்தது.

எனினும், குழுவின் பரிந்துரைகள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.