யாழில் மரண விசாரணை அதிகாரிகளின் செயற்பாடுகள் மீது குற்றச்சாட்டு

8

யாழில் சில மரண விசாரணை அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு சேவையினை முன்னெடுக்கும் சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இறந்த உடலங்களுக்கான விரைவாக மரண விசாரணைகளையும், உடற்கூற்று பரிசோதனைகளையும் எதிர்பார்த்து மக்களும் இலஞ்சம் வழங்கவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பிரான்ஸுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, பணமோசடியில் ஈடுபட்ட மரண விசாரணை அதிகாரியொருவர் பருத்தித்துறையில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 இலட்சம் ரூபா மோசடி செய்தார் என்று அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டள்ளன.

இந்நிலையிவ் விசாரணைகளை மேற்கொண்ட குற்ற விசாரணைப் பிரிவு, மேற்படி மரண விசாரணை அதிகாரியை கைது செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, தண்டப்பணத்துடனக்தை செலுத்துமாறு கோரி அவரைப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments are closed.