தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான (Powerlifting) பழு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில், 120 கிலோ எடைப் பிரிவில், Dead Lift போட்டியில் தங்கப் பதக்கத்தையும், Bench Press போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், Squats போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சற்குணராசா புசாந்தன், சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் பழைய மாணவனாவர்.
இவர், தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் புதிய சாதனைகளை தன்வசப்படுத்தியவராவார்.
தேசிய ரீதியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கியமையே இவரின் சிறந்த சாதனையாகும்.
Comments are closed.