கமலா ஹாரிஸிக்கு ஆதரவாக அமெரிக்காவில் ரகுமான் தலைமையில் இசை நிகழ்ச்சி

5

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டமைக்கு ஆதரவாக தென்னிந்திய திரைபட பாடகர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டின் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவிலேயே குறித்த இசைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில்,  அமெரிக்காவில் இயங்கும் ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் அமைப்பு கருத்து தெரிவிக்கையில்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை ஏ.ஆர். ரகுமானுடன், உலகத் தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாட உள்ளோம்.

நிகழ்ச்சிக்கான திகதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கமலா ஹாரிஸு க்கு ஆதரவாக 30 நிமிட ஆதரவு காணொளி ஒன்னையும் ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.