வெளிநாடுகளில் கோடிக்கணக்கான பணத்தை வைப்பிலிட்டுள்ள அரசியல்வாதிகள்

5

வெளிநாடுகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கான பணத்தினை வைப்பிலிட்டுள்ளதாக கூறப்படும் 13 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் குறித்து அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன.

குறித்த நிதி நிறுவனங்களிடம் இருந்து அது பற்றிய தகவல் அறிக்கைகளை பெறுவது முதல் நடவடிக்கை என்று அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் பணத்தை வைப்பு செய்யும் முறைகள் குறித்து இந்த நாட்களில் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் புலனாய்வு அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

இந்த பணிகள் கடினமானதாக இருந்தாலும், அதற்காக உன்னிப்பாக செயற்பட்டு வருவதாகவும், இதுபற்றிய தகவல் யாருக்கேனும் தெரிந்தால் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் செயற்படுவதாக சில அரசியல் மேடைகளில் குறிப்பிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.