ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள பணிப்புரை

9

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான 11,000 ஏக்கர் காணியை விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்களை பயிரிடுவதற்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய 5 ஏக்கரை விடக் குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சு அதிகாரிகளுக்கு  ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comments are closed.